Connect with us

கொடுத்த காசு பத்தல. ஒரு 11 ஆயிரம் கோடி மட்டும் கடன் கொடுங்க.. இந்தியாவை மீண்டும் நாடிய இலங்கை அரசு!

Untitled 105

செய்திகள்

கொடுத்த காசு பத்தல. ஒரு 11 ஆயிரம் கோடி மட்டும் கடன் கொடுங்க.. இந்தியாவை மீண்டும் நாடிய இலங்கை அரசு!

கொடுத்த காசு பத்தல. ஒரு 11 ஆயிரம் கோடி மட்டும் கடன் கொடுங்க.. இந்தியாவை மீண்டும் நாடிய இலங்கை அரசு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியவில்லை.

இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெரிய அளவில் அவதியுற்று வருகின்றனர்.

மற்றொருபுறம் சீன அரசிடம் வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் இருந்தநிலையில் இந்தியாவிடம் கடன் கேட்டது இலங்கை அரசு.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக ரூ.7,400 கோடி நிதியுதவியும், எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.3,700 கோடி நிதியுதவியும் இந்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியால் ஓரளவு நிதிநிலைமையைச் சமாளித்தது இலங்கை அரசு.

இந்தநிலையில் இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பினை நிலையாக வைத்திருக்கத் திட்டமிட்டு இந்திய அரசிடம் மீண்டும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்டுள்ளது.

இதுகுறித்த பேச்சுவார்த்தையினை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top