
Tamil Nadu
குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் வேண்டுமா? நாளை சென்னையில் சிறப்பு முகாம்..!!
தற்போது அனைவருக்கும் பயன்படும் விதமாக காணப்படுவது குடும்ப அட்டை என்றழைக்கப்படுகின்ற ரேஷன் கார்டுகள் தான். ஏனென்றால் பல இடங்களில் குடும்பத் தலைவிகளின் பெயரில் ரேஷன் கார்டுகள் வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றன.
இதனால் பெண்கள் மிகுந்த பயனை பெற்றுள்ளனர். இந்த நிலையில் பல குடும்ப அட்டைகளில் கரக்ஷன் என்று அழைக்கப்படுகின்ற திருத்தம் செய்யப்படாதவைகள் அதிகமாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் இருந்த குடும்ப அட்டையிலிருந்து பெயரை நீக்கி புதிதாக சென்ற குடும்பத்தில் பெயரை இணைக்கும் நிலமையும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு நாளையதினம் உகந்த நாளாக அமைந்துள்ளது. நாளைய தினம் சென்னையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் மாற்றம் செய்ய நாளை சென்னையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
