செவ்வாய் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த விண்கலம்…. வெளியான ஆச்சரிய தகவல்..

மனிதர்கள் பல ஆண்டுகளாக பூமியை மட்டுமல்லாமல் மிஞ்சியுள்ள ஏனைய கிரகங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நாம் பூமியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதே இன்னும் நிறைய உள்ள நிலையில், மற்ற கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுந்தவையான அங்கு ஆக்சிஜன் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ளதா போன்ற ஆய்வுகள் நடந்து வருகிறது.

செவ்வாய்

பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியை மனிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இந்த ஆய்வின் மூலம் ஒரு ஆச்சரிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கூட்டாக செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக The Roscosmos ExoMars Trace Gas Orbiter என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அந்த விண்கலம் Fine Resolution Epithermal Neutron Detector (FREND) என்ற கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் மறைநீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்து அதை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிரேக்கிங் நியூஸ் நான் மறைநீரை கண்டறிந்து விட்டேன். அது பனிக்கட்டியாக இருக்கலாம். தண்ணீரை உள்ளடக்கிய தாதுக்களாக இருக்கலாம். அங்கிருந்த பள்ளத்தாக்கு பெரியது. மிகமிகப் பெரியது. இனி எதிர்காலத்தில் வரும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளனர்.

ஆம் இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை மட்டுமல்ல அங்குள்ள பள்ளத்தாக்கு ஒன்றையும் அந்த விண்கலம் கண்டறிந்துள்ளது. மேல்பரப்பில் சுமார் 40 சதவிகித தண்ணீரை உள்ளிடக்கி உள்ள, அந்த பள்ளத்தாக்கின் பரப்பளவு நெதர்லாந்து நாட்டை விட பெரியதாக உள்ளதாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment