Entertainment
ரவுடி பேபி பாடலுக்கு இணையான பாடல்: டான்ஸ் மாஸ்டரின் அசத்தல் தகவல்!
தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் முடிவு செய்யப்படும் என்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் D43 என தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் இதற்கான ரிகர்சல் தற்போது நடைபெற்று வருவதாகவும் டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
இந்த பாடல் ரவுடிபேபி பாடலுக்கு இணையான வகையில் இருக்கும் என்றும், இந்த பாடலுக்கான டான்ஸ் கிரேஸியாக இருக்கும் என்றும் தனுஷ் அவர்களின் மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல் ஒன்று தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
D43 படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்க உள்ளார் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
