Connect with us

கார்த்தியின் சுல்தான் படத்திற்காக சிம்பு பாடிய பாடல்… வேற லெவல்…

Entertainment

கார்த்தியின் சுல்தான் படத்திற்காக சிம்பு பாடிய பாடல்… வேற லெவல்…

b993ebaf941369a5fa876db1525d018b-1

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள சுல்தான் படம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. பிற படங்களை போன்று சுல்தான் படப்பிடிப்பும் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

கொரோனா பிரச்சனை ஓரளவுக்கு சரியானதும் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடித்தனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா சுல்தான் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார்.

இந்நிலையில் இரண்டாவது பாடலான யாரையும் இவ்ளோ அழகாவின் லிரிக்கல் வீடியோ மார்ச் 5ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். விவேகா எழுதிய பாடலை பாடியிருப்பது சிம்பு என்று விளம்பரம் செய்தனர்.

அறிவித்தபடி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. லிரிக்கல் வீடியோவை பார்த்த ரசிகர்களோ, வேற லெவல் என்கிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top