
பொழுதுபோக்கு
பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் மகன் ஒரு கிரிக்கெட் வீரரா? உண்மையா இது?
தமிழ்த் திரையுலகில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். அவரது காதல் கதை படங்களுக்காகவே இளைஞர்கள் மத்தியில் இவருக்கு என தனி மதிப்பு உண்டு. காதல் டயலாக் அனைத்தையும் அனைவரும் மிகவும் ரசிக்கும்படி மிகவும் அற்புதமாக காதல் ரசத்துடன் எழுதிருப்பார்.
கவுதம் மேனனுக்கு ஆர்யா யோஹன் மற்றும் துருவ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இவர்களில் ஆர்யா யோஹன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
நேற்று சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய யோஹன் மூன்று ஓவர்கள் பந்து வீசி 26 ரன்களைக் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதுவும் அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார். இவர் லெப்ட் ஆர்ம்ஸ் பௌலர் என்பது குறிப்பிடத்தக்கது.
யோஹன் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவி வருகிறது. தன் மகன் பெயரை மையமாக கொண்டுதான் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என விஜய் நடிக்க வேண்டிய ஒரு படத்திற்குப் பெயர் சூட்டியிருந்தார் கவுதம் மேனன்.
அதேபோல அவரது இரண்டாவது மகனின் பெயர் துருவ் பெயரை மையமாக கொண்டுதான் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ என்றும் பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். இரண்டாவது மகன் துருவ்வும் கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவர் என அவரே கூறி இருக்கிறார்.
கமலுடன் மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி! அனல் பறக்கும் இந்தியன் 2 அப்டேட்!
