தன் நாட்டுக்காக மனித வெடிகுண்டாக மாறிய ராணுவ வீரர்!!
ரஷ்யா- உக்ரைன் நாடுகளிக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதனால் இருநாடுகளிடையே போர் நடைப்பெற்றால் கடும் பொருளாத இழப்பு ஏற்படும் என உலக நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாவே ரஷ்யா- உக்ரைன் நாடுகளிக்கிடையே போர் நிலவி வருகிறது. அந்த வகையில் ரஷ்ய வீரர்கள் வருவதை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் போர்களத்தில் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
தெற்கு மாகணமான கெர்சானில் ரஷ்ய வீரர்கள் படையெடுத்து வந்தனர். அவர்களை தடுக்க எண்ணிய உக்ரைன் ராணுவ வீரர் தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்தார்.
இதனால் ரஷ்ய வீரர்கள் முன்னோக்கி சென்ற பாலம் முற்றிலும் சேதமடைந்தது. தன் நாட்டுக்காக மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
