ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சில நாட்களாக பதற்றமான நிலை நிலவி கொண்டு வருகிறது. அதன்படி உக்ரைனில் ரஷ்யா படைகளை குவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கு அமெரிக்கா பெரும் எச்சரிக்கையை ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அளித்துள்ளது. அதோடு சீன வெளியுறவு அமைச்சர்கள் உக்ரைன் நிலைப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் எச்சரிக்கையான கருத்தினை கூறி இருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடியாக உக்ரேனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியே வர உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். தற்போது உக்ரைனில் நிலைமை சரியில்லை; விரைவாக மக்கள் வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். உக்ரைனில் நிலைமை சரியில்லாததால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தோடு வெளியேற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .