Entertainment
ரஜினியின் ‘2.0’, கமலின் ‘இந்தியன் 2’ படங்களின் அபூர்வ ஒற்றுமை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்திற்கும், கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கும் ஒருசில அபூர்வ ஒற்றுமைகள் இருந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த இரு படங்களையும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களும் அவரே இயக்கிய படங்களின் இரண்டாம் பாக படங்கள் ஆகும்,. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த நிலையில் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்துள்ளார். அதேபோல் ‘இந்தியன் 2’ படத்திலும் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
