என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப நம் தமிழகத்தில் அனைத்து வனங்கள், வளங்கள் மிகுதியாக காணப்படுகிறது. தமிழகத்தில் வனவிலங்குகளும் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக யானைகள், புலிகள், குரங்குகள் போன்றவைகள் நம் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அவற்றின் வாழ்விடங்கள் தமிழகத்தின் மிக குறைவாக காணப்படுகிறது.
ஏனென்றால் வனப்பகுதிகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதிகள் இருக்கும் விலங்குகள் அங்குள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை தாக்குகின்றன.
கடந்த சில வாரங்களாகவே ஆட்கொல்லும் புலியானது நீலகிரி மாவட்டத்தில் சுற்றித் திரிந்தது. அந்த புலி தான் கண்ணுக்குத் தட்டுபட்டவர்களை எல்லாம் தாக்கியது. இதில் சிலர் உயிரிழந்தனர்.
இதனால் வனத்துறையினர் இந்த புலியை விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தனர். இந்த புலியானது வனத்துறைக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. இதனால் வனத்துறையினர் சோர்வுற்றனர்.
ஆயினும் தற்போது இந்த புலி மசினகுடி பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மசினகுடி வனப்பகுதியில் தென்பட்ட இந்த T23 புலி வனத் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.