Connect with us

குறும்படம் போடவில்லையே… குமுறும் மக்கள்..!!!!

Entertainment

குறும்படம் போடவில்லையே… குமுறும் மக்கள்..!!!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் நடக்கும் சண்டை, புறணி என அனைத்தும் டீஆர்பியை  எகிற வைக்கிறது. 

முதல் வார இறுதியில் கமல்  போட்டியாளர்களை சந்திக்க இருக்கும்போதே வீட்டிற்குள் சண்டை களைகட்டி விட்டது. தமிழ்ப்பொண்ணு என்று ஒரு புதுப் பிரச்சினையை மதுமிதா கிளப்ப ஒட்டு மொத்தமாக அனைவரும் அவரை ஓரங்கட்டிவிட்டனர்.

0e173a42c80f235be01fe6bcf91e06b2

மதுமிதாவினை வனிதா அண்ட் டீம் சளைக்காமல் டார்கெட் செய்து வந்தது, அவருக்கு துணையாக இருந்த மீராவையும் தங்கள் டீமில் சேர்த்துக் கொண்டு டார்கெட் செய்தனர்.

இதற்கிடையில் மீரா மிதுனுக்கும் முகெனுக்கும் இடையே நடந்த உரையாடலைத் தவறாகப் புரிந்து கொண்ட சாக்ஷி அதனை வனிதாவிடம் கூற, அந்த பிரச்சினை பூகம்பமாய் வெடித்தது.

கடுப்பான அபிராமி பயங்கரமாக கத்திவிட்டார், ஆனால் இவை அனைத்தும் சாக்ஷியின் தவறான புரிதலால் நடந்தது.

அதனால் இந்த வாரம் நிச்சயம் குறும்படம் இருக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது. கமல் ஹாசன் அந்தப் பிரச்சினையை மேம்போக்காக பேசிவிட்டு முடித்து விட்டார். இதனால் மக்கள் கடுப்பாகிவிட்டனர்.

மதுமிதாவுக்கு எதிராக செயல்படுவதுபோல் உள்ளது, என பிக் பாஸை குறை கூறி வருகின்றனர் மக்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top