News
அத்திவரதரின் காணிக்கை உண்டியலில் காத்திருந்த அதிர்ச்சி
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் துயில் கொள்வார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். 1979-ம் ஆண்டு சூலை 1 மக்களுக்கு காட்சி தந்தார். அதற்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து இப்போது 2019-ம் ஆண்டு சூலை 1-ம் தேதியை தொடர்ந்து 48 நாட்கள் மக்களுக்கு காட்சியளித்தார்.
முதல் 30 நாட்கள் சயன கோலத்திலும் மற்ற நாட்கள் நின்றவாறும் மக்களுக்கு அருள்பாலித்தார். 48 நாட்கள் முடிவடைந்த நிலையில் அத்திவரதர் வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.

அத்திவரதர் வைபவத்திற்காக அரசு 41 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. இதனையடுத்து அத்திவரதர் வைபவத்திற்காக கோவிலில் 18 உண்டியல்கள் வைக்கபட்டிருந்தது அதில் 13 உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டன. 13 உண்டியல்களில் உள்ள மொத்த தொகை 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் இருந்தது. இதில் 164 கிராம் தங்கமும் 4,959 கிராம் வெள்ளியும் மக்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
இன்னும் 5 உண்டியலின் காணிக்கைகள் எண்ணப்படாத நிலையில் 13 உண்டியலின் காணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
