பெண் காவலரின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!!

சென்னையில் திமுக பிரமுகர்கள் மீது அளித்த பாலியல் புகாரை பெண் காவலர் வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த சுழலில் நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டத்தில் இருந்த 2 திமுக பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது கூட்டத்தில் தெரியாமல் பெண் காவலர் மீது கை பட்டதாகவும், இதற்காக பெண் காவலரிடம் திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கூறியதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.