Connect with us

புஷ்பாவின் படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடக்கம் ! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !

Pushpa the rule part 2 1024x576 1 1 1 2

பொழுதுபோக்கு

புஷ்பாவின் படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடக்கம் ! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது வசூலிலும் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வருவற்கு ரெடியாகியுள்ளது.

முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது.

pushpa 2 vijay sethupathi 2

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவருக்கும் படத்தில் நெகடிவ் ரோல் தான் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மாஸான தகவல் தற்பொழுதிய வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை விழா நாளை நடைபெறவுள்ளது. புஷ்பா ராஜ் ஆக ஏஏ மற்றும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவுடன், ஃபஹத் பாசிலும் மீண்டும் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிதி சங்கர் பற்றி யாரும் அறியாத தகவல்கள்!

Priyamani AlluArjun collage 1
தயாரிப்பாளர் ஒய் ரவிசங்கர் படத்தின் ஷூட்டிங் முன்பகுதியில் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, ​​“தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எங்களுக்கு வேலை நிறுத்தம் நடக்கிறது. வேலைநிறுத்தம் முடிந்ததும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து தொடங்குவோம், அல்லது வேலைநிறுத்தம் முடிந்தவுடன் தொடங்குவோம், ”என்று ஷங்கர் தெரிவித்தார்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top