ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!: துரைமுருகன் பதில்;
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பல தரப்பு மக்களும் வரவேற்பளித்தனர். ஆனால் கர்நாடக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதனால் இன்று காலை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் கர்நாடக மாநில முதலமைச்சர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க கூடாது என்பதற்காக பிப்ரவரி மாதத்தில் முதல் வாரம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தின் நீர் வளத்துறை அமைச்சர் இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி காவிரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நாட்டின் நீர்வளம் கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்கு தான் முதலிடம் தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டபூர்வ அடிப்படையில் குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழகத்திற்கு உண்டு என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஒகேனக்கல் தொடர்பான நீர்வளத்துறை அமைச்சர் அறிக்கைக்கு தமிழகத்தின் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
