Connect with us

“இரண்டாம் டோஸும் மிக முக்கியம்;”இரண்டாம் டோஸில் மெத்தனமாக 22 லட்சம் பேர்!!

News

“இரண்டாம் டோஸும் மிக முக்கியம்;”இரண்டாம் டோஸில் மெத்தனமாக 22 லட்சம் பேர்!!

607a9050a1bdf32fdb938b1a41400ae8

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வருகின்றனர். ஆனால் முதலாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தவணை  தடுப்பூசி செய்துகொள்வதில் மெத்தனம் காட்டுவதாக தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் சுமார் 22 லட்சம் பேர் இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.da3e2b61ab4e86d0322e31229a309806

மேலும் ஒரு மாதத்திற்குள், அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி  எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோரின் 56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். இரண்டாம் தவணை தடுப்பூசி  பொறுத்தவரை 17 சதவீதம் பேர் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் முதியோர்கள் கட்டாயம் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.இதனால் தற்போது தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top