இரண்டாவது நாளாக தொடரும் பத்ம விருது விழா; பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது!

நேற்றைய தினம் டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி வந்தார்.இதில் மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

பாப்பையா

மீதமுள்ள 102 விருதுகள் பத்ம ஸ்ரீ விருதாக காணப்படுகிறது. அதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து பத்மபூஷன் விருது கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பலருக்கும் தொடர்ச்சியாக விருதுகள் வழங்கப்பட்டன

இந்த நிலையில் இந்த பத்ம விருது விழா இன்றைய தினமும் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டாவது நாளாக பத்ம விருதுகளை வழங்கி வருகிறார் இந்திய  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அனிதா

நகைச்சுவை பட்டிமன்ற  நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை பி.அனிதா பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment