Connect with us

காலையிலேயே தொடங்கிய கடல் சீற்றம்; ரெட் அலர்ட்டின் எச்சரிக்கையா?

Arabian Sea

தமிழகம்

காலையிலேயே தொடங்கிய கடல் சீற்றம்; ரெட் அலர்ட்டின் எச்சரிக்கையா?

நேற்றைய தினம் திடீரென்று தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்த ரெட் அலர்ட் என்பது அதிக கனமழையை குறிக்கும் சொல்லாக காணப்படுகிறது.

அதிலும் நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மீட்பு படையினர் விரைந்து நேற்று இரவே சென்றனர். இவ்வாறு உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீர் வீட்டுக்குள் புகுந்தது. இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றத்தோடு விளங்குகிறது.

முட்டம், தேங்காய் பட்டணம், குளச்சல் உள்ளிட்ட மீன் பிடித்து துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 4,000 மேற்பட்ட பைபர் படகு, 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top