
தமிழகம்
ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
வருகின்ற திங்கட்கிழமை நம் தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏனென்றால் இன்னும் ஒரு நாள்தான் பள்ளி திறக்க உள்ளதால் ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் மின் இணைப்புகளில் மின்கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இயங்க கூடிய நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து அதன் பின்னர் பேருந்து இயக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சத்துணவு கூடங்களில் சுத்தப்படுத்தி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கும் பள்ளி திறக்கும் நாள் என்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை உறுதிசெய்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
