பிக்பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை தாண்டி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக எவிக்சன் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி வருகின்றனர்
அந்த வகையில் நேற்று 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கடந்த 100 நாட்களில் அனைவரும் சிரித்து மகிழும் காட்சிகளில் சிலவற்றை தொகுத்து பிக்பாஸ் ஒளிபரப்பினார். அந்த காட்சிகளை பார்த்து போட்டியாளர்கள் சிரித்து சிரித்து மகிழ்ந்தது பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சென்டிமென்ட் காட்சிகளைத் தொகுத்து வழங்கும் வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார். இந்த காட்சிகளை பார்த்து போட்டியாளர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டும், பாசப்பார்வை பார்த்துக் கொண்டும் நெகழ்ச்சியாக இருந்ததை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கும் கண்ணீர் வரும் வகையில் இருந்தது
புரமோ வீடியோவே இப்படி இருக்கும்போது நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே சந்தோசமாக இருப்பதாக பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் பிக்பாஸ் 100 நாட்களின் மலரும் நினைவுகளை ஒரு சில நிமிடங்களில் தொகுத்து வழங்கியுள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#Day101 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Q7E7kxI3lC
— Vijay Television (@vijaytelevision) January 13, 2021