வாட்ஸ் அப் முடக்கத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதோ முழு விபரங்கள்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் கணக்குகள் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் முடக்கப்பட்டு வருகின்றன என்ற நிலையில், இதற்கு வாட்ஸ்அப் நிர்வாகம் தகுந்த காரணங்களை கூறியுள்ளது. இந்த நிலையில் நம்முடைய வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக பொய்யான, சட்டவிரோதமான, அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் வேறொருவரிடம் இருந்து இது போன்ற தகவல்கள் வந்தால் அவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியின் உண்மைத் தன்மை அல்லது முறையான ஆதாரத்தை சரிபார்க்காமல் செய்தியை யாருக்கும் பார்வேர்ட் செய்ய வேண்டாம்.

யாரேனும் உங்களிடம் ஒரு செய்தியை அனுப்ப வேண்டாம் என்று கேட்டால் அவருக்கு செய்தி அனுப்புவதை உடனடியாக தவிர்க்கவும்.

பயனர்கள் இருக்க விரும்பாத குழுக்களில் அவர்களை ஒருபோதும் சேர்க்க வேண்டாம்.

பிராட்கேஸ்ட் பட்டியல் மூலம் அடிக்கடி செய்திகளை அனுப்புவதை குறைத்துக்கொள்ளலாம்.

உங்கள் வாட்ஸ் அப் சாட்டில் ஸ்பேம் அல்லது ஆட்டோமேட்டிக் மெசேஜ் அதிக அளவில் வந்தால் உடனடியாக அதை ரிப்போர்ட் செய்யுங்கள்.

மேற்கண்ட காரணங்களால் தான் உங்கள் கணக்கில் மீது புகார் அளிக்கலாம். பல முறை ஒரே கணக்கில் புகார் அளிக்கப்பட்டால் உங்கள் வாட்ஸ் அப் கணக்கு முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.