Connect with us

மும்பையில் ஆட்சி மாற்றமா? நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு…!!

simple

செய்திகள்

மும்பையில் ஆட்சி மாற்றமா? நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எம்எல்ஏகளுக்கிடையே அதிருப்தியான சூழல் நிலவுகிறது.  அங்கு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கிளம்பியுள்ளனர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அவர்களை ஜூலை மாதம் வரை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் மகராஷ்டிரா மாநிலத்தில் நம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் திரண்டனர்.

முதலமைச்சர் உத்தவ் தாக்குரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் கவுகாதியில் முகாடப்பட்டன. 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் துணை சபாநாயகரின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை பன்னிரண்டாம் தேதி வரை தடை விதித்தது.

சிவசேனா அரசு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார் முன்னாள் முதலமைச்சர்.

நாளை காலை 11 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டுமாறு ஆளுநர் கோஸ்யாரி பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தவ் தாக்கரே அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒரே தீர்மானத்தின் மீது மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் என அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top