எமனாக மாறிய லாரியின் கயிறு… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டவர் மீது கயிறு சுற்றி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திரு பகுதியில் வசித்து வருபவர் 30 வயதான முத்து. இவர் நேற்றைய தினத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது உரம் ஏற்றி வந்த லாரியில் இருந்து கயிறு அறுந்து விழுந்துள்ளது. பின்னர் முத்துவின் கழுத்தில் வசமாக சுற்றியுள்ளது.

கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலி!!

இந்த விபத்தில் நிலைத்தடுமாறி போன முத்து இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது முத்து மருத்துவ மனையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் விபத்து குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.