தற்போது உள்ள தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொழில் முடக்கமும் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது சினிமா துறையினரும் தங்களது படத்தினை தயாரிக்க தாமதம் காட்டுகின்றனர். காரணம் என்னவெனில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அவர்கள் அதற்கு அஞ்சி தங்களது படத்தினை சில நாட்களுக்கு இயக்குவதற்கு தள்ளி வைத்துள்ளனர். இன்னிலையில் பல சின்னத்திரையில் இருக்கும் வெள்ளித்திரை நடிகர்கள் அவ்வப்போது உதவி வருகின்றனர்.
இச்சம்பவம் சினிமா துறையிலும் நல்லதொரு உள்ளம் கொண்ட நடிகர்கள் உள்ளனர் என்றும் அவரது ரசிகர்கள் அவர்களை கொண்டாடுகின்றனர். மேலும் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை அளித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் 50 லட்சமும் ,நடிகர் அஜித்குமார் 25 லட்சமும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இத்தகைய காலகட்டத்திலும் இவர்களின் வயிற்றில் அடிக்குமாறு அவ்வப்போது கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறுகின்றன.
இச்சம்பவம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் குமார் வீட்டில் நடைபெற்றது. அதன்படி சினிமா தயாரிப்பாளர் குமார் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த கொள்ளையில் இரண்டு சவரன் நகை ,22 ஆயிரம் ரூபாய் பணம் ,3 சிசிடிவி கேமராக்கள், டிவிடி பிளேயர், இன்வெர்ட்டர் பேட்டரி, ஆறு பென்டிரைவ் போன்றவைகளும் திருட்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.