நடிகை கங்கனாவின் கன்னத்தை விட சாப்ட்டாக சாலை போடப்படும்! சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ;

தேர்தல் நெருங்கி விட்டாலே வேட்பாளர்கள் பலரும் வரிசைகட்டி பொதுமக்களை சந்திப்பர். அதிலும் குறிப்பாக கட்சிகள் பலவும் பல்வேறு விதமான தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவிப்பார்கள். இதனால் தேர்தல் களம் மிகவும் கொண்டாட்டம் உடையதாகவே காணப்படும்.

ஏனென்றால் அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் நகைச்சுவையோடு கலந்து காணப்படும். அதிலும் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் பொழுதுபோக்கிற்காக தேர்தல் களத்தை சந்திப்பது போல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி குவித்து வழங்குவர்.

இதன் மத்தியில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் நடிகையின் கன்னம் போல சாலை போடப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி கங்கனா ராணவத்தின் கண்ணத்தை விட சாலை மிகவும் மென்மையாக இருக்கும் என்று சண்டிகர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார்.

ஜம்தாரா தொகுதியில் உலகத்தரத்தில் 14 சாலைகள் போடப்படும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரி தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏவின் இத்தகைய பேச்சு பெரும் சர்ச்சையை உள்ளதாக மாறியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இணையதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment