Connect with us

கோலாகலமாக நடைபெற்ற திருமயம் மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு! 22 பேர் படுகாயம்;

manchuvirattu

செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற திருமயம் மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு! 22 பேர் படுகாயம்;

கோலாகலமாக நடைபெற்ற திருமயம் மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு! 22 பேர் படுகாயம்;

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும் பொங்கல் திருவிழா இந்த ஆண்டு சற்று அமைதியாகவே நிறைவு பெற்றது. ஆயினும் தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நடைபெறும் பல பகுதிகளில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடை இன்றி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழர்கள் மஞ்சுவிரட்டு போட்டியையும் பொங்கல் தினத்தன்று நடத்தி கொண்டாடுவர்.

மஞ்சுவிரட்டு போட்டிகளிலேயே சிறப்பு பெற்ற மஞ்சுவிரட்டு போட்டியாக காணப்படுவது திருமயம் அருகே நடைபெறும் மஞ்சுவிரட்டுதான். திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி தற்போது நிறைய பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் அருகே கே.ராயவரத்தில் நொண்டி அய்யனார் கோவில் திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி  நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்று இருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மஞ்சுவிரட்டு போட்டியினை கண்டு ரசித்த நிலையில் 22 மாடுபிடி வீரர்கள் மட்டும் பரிதாபமாக காயமடைந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top