மாணவர்களின் போராட்டத்தின் விளைவு-தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!!
நம் தமிழகத்தில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இப்படி ஏராளமான பல்கலைக்கழகங்கள் நம் தமிழகத்தில் காணப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான தேர்வு கட்டணம் சற்று உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்வு கட்டணம் உயர்ந்ததை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
எனவே தேர்வு கட்டணம் உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பாரதிதாசன் பல்கலைக்கழகம். தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
