டெல்லி பயணம் சென்றதன் விளைவு : வருகிற 29- ஆம் தேதி கேரளா வரும் அமித்ஷா..!! பின்னணி என்ன ?
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் போக்கு கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருகிறது.
குறிப்பாக தெலுங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையினை ரத்து செய்தது முதல் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஆளுநர் தமிழிசையை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருகிறார்.
இதனால் ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திடீர் பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி பயணம் சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் தமிழிசை முறையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே கேரள ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானை தெலுங்கானாவுக்கு மாற்றிவிட்டு தமிழிசையை கேரள ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியது.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, வருகின்ற 29-ஆம் தேதி கேரள மாநிலத்திற்கு வருகை தரவுள்ளதாக கேரள பா.ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் கூறியுள்ளார். மேலும், கேரளாவில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை பற்றி விசாரணை செய்யவும், தமிழிசையை விவகாரத்தினை ஆலோசனை செய்வதாக தெரிகிறது.
