சென்னை சவுகார்பேட்டை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் 24 பேர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை யானை கவுனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகை பட்டறைகள் இயங்கி வருகிறது வடமாநிலத்தவர் நடத்திவரும் இந்த நகை பட்டறைகளில் உத்தர பிரதேசம் பீகார் மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நகை பட்டறைகளில் பணிபுரிந்து வருவதாக தொழிலாளர் நலத் துறைக்கு தகவல் வந்ததை அடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது சவுகார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நகை பட்டறைகளில் 18 வயது கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது அதனை எடுத்து மேற்குவங்கம் உத்தர பிரதேசம் மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து வேலைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களுக்கு நகை பட்டறை உரிமையாளர்கள் குழந்தைகளின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சம்பளம் இல்லாமல் வெறும் உணவு மட்டுமே கொடுத்து வருகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது சில சிறுவர்களுக்கு மட்டும் மாதம்தோறும் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு பல மணி நேரம் அவர்களை பணி செய்ய வைத்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது பெரும்பாலான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் சம்பந்தப்பட்ட நகை பட்டறை உரிமையாளர்களுக்கு சுமார் 40,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.