சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது குடியரசு தின அணிவகுப்பு-தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்பு!
இன்றைய தினம் இந்தியாவில் 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு அங்கு வரிசை கட்டி வருகின்றன.
ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று அறிவித்திருந்தார்.
அந்த வரிசையில் சென்னையில் நடைபெற்று வரும் 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளது. தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் புகழை பறைசாற்றும் வகையில் தலைநகர் சென்னையில் அணிவகுப்பு நடை பெற்று வருகிறது.
இந்த அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி உள்ளது. அந்த வாகனத்தில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ. உ.சிதம்பரனார் உருவங்களுடன் கூடிய ஊர்தி அணி வகுத்து வருகிறது. பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், காமராஜர் உருவத்துடன் ஊர்தி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகிறது
