சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்..!!! நீதிபதி உத்தரவால் பரபரப்பு;

தற்போது அதிமுகவில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்று வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து சசிகலா சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நீக்கிய உத்தரவு செல்லும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியது. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜே ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக தெரிகிறது. அதிமுகவின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியதால் வழக்கில் இருந்து விலகல் அளித்துள்ளார். சசிகலாவின் மனுவை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யபட்டது.

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் இவ்வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment