
பொழுதுபோக்கு
தள்ளி போகும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி! காரணம் தெரியுமா?
இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.
இப்படத்தில் சியான் விக்ரமுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, முகமது அலி பெய்க், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி மற்றும் கே.எஸ். ரவிக்குமார் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விக்ரம் இந்த படத்தில் 7 விதமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கோப்ராவின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் புதிய லிரிக்கல் வீடியோ பாடலை வெளியிட்டனர்.
‘உயிர் உருகுதே’ என்ற பாடல் ஒரு காதல் மற்றும் மெல்லிசைப் பாடலாகும். தாமரை எழுதிய பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் குரல் கொடுத்தார்.இப்படம் 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இரவின் நிழல் ஹீரோயினா இது? செம மாஸான போட்டோவா இருக்கே!
ஆனால் கோப்ரா படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸ்ட் 11-ம் தேதி வெளியீட்டில் இருந்து கோப்ரா படம் தள்ளி போவதாக தகவல் வந்துள்ளது. அதனால் அந்த தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வர முழு முயற்சியில் படக்குழு இணைந்துள்ளது.
