Connect with us

என்னது!! ரூ.20 கோடி செலவில் இரட்டை கோபுரம் இடிக்க காரணம் இதுதானா?

Tamil News large 3108674

செய்திகள்

என்னது!! ரூ.20 கோடி செலவில் இரட்டை கோபுரம் இடிக்க காரணம் இதுதானா?

இந்தியாவின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் இரட்டை கோபுரம் உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது. இந்நிலையில் 2005-ம் ஆண்டு 14 மாடிகளை கட்ட அனுமதி பெற்ற நிறுவனம் 2012-ம் ஆண்டு 40 மாடிகளை கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் இரட்டை கோபுரம் குடியிருப்புகளை இடிக்க கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2021- ஆகஸ்ட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. குறிப்பாக கட்டடத்தை இடிக்க அனுமதி மறுத்ததுடன் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் 2 கட்டடங்களில் 652 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் செலுத்திய பணத்தை 12% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது. பின்னர் கட்டடத்தை இடிக்கும் பொறுப்பு மும்பையை சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி மதிய அளவில் இரட்டை கோபுர கட்டடங்களை இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கட்டிடங்களை இடிக்க சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், சுமார் ஒன்பது வினாடிகளில் இடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top