இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்!: வானிலை ஆய்வு மையம்;

நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் கனமழை பெய்தது. அதன்பின்னர் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே கன மழையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்தது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

அதன்படி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மழை

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூண்டி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி, கும்மிடிப்பூண்டியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மூடுபனி நிலவும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment