Connect with us

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்….!! 11 மாவட்டங்களில் பலத்த காற்று!!!

மழை

தமிழகம்

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்….!! 11 மாவட்டங்களில் பலத்த காற்று!!!

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்….!! 11 மாவட்டங்களில் பலத்த காற்று!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளைய தினம் 10 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி நாளை முதல் 10-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் எடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top