சென்னையை விடாமல் துரத்தும் மழை! நவம்பர் 11ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்;

தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இவை அடுத்த 36 மணி நேரத்தில் வலு பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை

மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தில் நிலை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தில் உள்ள  மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது நவம்பர் 11ஆம் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 11ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவை,நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment