
தமிழகம்
அக்னி நட்சத்திரத்தை அணைத்த மழை..!! இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடரும்..!!
நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவுகிறது. இந்த நிலையில் கோடையில் வெயிலின் தாக்கம் எந்த ஒரு மாவட்டத்திலும் பதிவாகாத வண்ணம் மழை பரவலாக பெய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று முதல் மே 26-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மே 28-ஆம் தேதியோடு நம் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அக்னி நட்சத்திரம் நிலவுகின்ற இந்த சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களுக்கு இதமான வானிலையை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளதாக காணப்படுகிறது.
