Connect with us

எஸ்.பி.வேலுமணியின் இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை! காலை 6 மணிக்கே தொடங்கிய சோதனை!!

SP Velumani EPS 1

Tamil Nadu

எஸ்.பி.வேலுமணியின் இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை! காலை 6 மணிக்கே தொடங்கிய சோதனை!!

எஸ்.பி.வேலுமணியின் இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை! காலை 6 மணிக்கே தொடங்கிய சோதனை!!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு  அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசு அலுவலங்கள் முதல் எதிர்க் கட்சி அமைச்சர்கள் இல்லம் வரை அனைத்து இடங்களிலும் அதிக அளவு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  இடங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  இடங்களில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். கோவை மைல்கள் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்திக் கொண்டு வருகிறது.

ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூபாய் 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top