Connect with us

“மாணவர்கள் நலன் கருதி” புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

News

“மாணவர்கள் நலன் கருதி” புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

fb5ae7a63d3316984f0d9a5f621e7f1f

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக உயர் நீதிமன்றம் உத்தரவை தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசிற்கும் அடுத்தடுத்து ஆணைகளையும் பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக காணப்படுகிறது. இவை தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.25b39d95dfef543cd6e2d94a4bbd737e

அதன்படி மாணவர்கள் நலன் கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தனி பாடத் திட்டத்தை வகுக்க கோரியும் வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும் தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர் நலனுக்கு சிறந்தது என்றாலும் அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட் தனது கருத்தினை கூறி உள்ளது. மேலும் கல்வித்துறை செயலாளருக்கு புதிய மனு அளிக்க மனுதாரருக்கும்,  12 வாரங்களில் அதை பரிசீலித்து முடிவெடுக்க புதுச்சேரி அரசுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது சென்னை ஹைகோர்ட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top