எச்சரிக்கை: பொதுமக்களுக்கு இன்று மெரினா கடற்கரைக்கு செல்ல தடை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தொடர்ந்து கனமழை சில நாட்களாக பெய்து வந்தன.

கனமழை

அதன் பின்னர் இவை கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் தற்போது சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு நீட்டித்திருப்பதால் இன்று சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment