ஆளுநர் காரிலேயே கல்லெறிந்தார்கள் என்றால் சாமானிய மக்களின் பாதுகாப்பு?: அதிமுக வெளிநடப்பு
இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரின் பாதுகாப்பு பற்றி பேசினார். அப்போது பேசிய அவர் ஆளுநரின் பாதுகாப்பில் தமிழக அரசு எந்த ஒரு சமரசம் செய்யாது என்றும் கூறினார்.
ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர் என்றும் அவர் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இதனை அரசியலாக்க முயற்சி செய்து வருகிறார்கள் உறுதியாக அது நடக்காது என்று கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிகிறது. சட்டப்பேரவையில் இருந்து அதிமுக மட்டுமின்றி பாஜகவினரும் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எடப்பாடிபழனிசாமி. இதனால் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் முழக்கம் எழுப்பியவாறு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநரின் வாகனம் தாக்குதலுக்கு திமுக அரசு துணை நின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆளுநர் பாதுகாப்பில் தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
ஆளுநர் கார் மீதான தாக்குதல் காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என்றும் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.
