
பொழுதுபோக்கு
இரவின் நிழல் படத்துக்கு நடிகை பிரிகிடாவால் வந்த பிரச்சனை! மன்னிப்பு கேட்ட படக்குழு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் , தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் தனது திறமையை உலகிற்கு நிரூபிப்பவர். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார்.
இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்படம் வெளியானது முதல் தற்போது வரை பார்த்திபன் நடிகை பிரிகிடா ஆகியோர் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர்.
இதெல்லாம் பெத்ததுக்கு இப்படி வளத்ததுக்கு பேசாம கள்ளிபால் ஊத்தி கொண்டு இருக்கலாம்🤬#IravinNizhal #brigida pic.twitter.com/j8ZAl2OBnu
— Alaguraja A (@alagurajaa1984) July 17, 2022
இந்நிலையில் பிரிகிடா தியேட்டரின் வெளியில் மீடியாவிடம் பேட்டி கொடுக்கும் போது ‘சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று” என பிரிகிடா கூறினார்.
ஒரு படத்துல நடிச்சிட்டதால பெரிய மயிறுனு நினைப்பு…
சேரி பிகேவியர் என்ன தெரியுமா நாயே?
அனைவரையும் சமமாக நடத்துவது. pic.twitter.com/kSWabt4oWe— Babu Ravindhar (@AnAmbedkarite) July 17, 2022
சேரி மக்கள் பற்றி நடிகை பிரிகிடா பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதற்கு தற்போது பிரிகிடா மன்னிப்பு கோரியுள்ளார். அதில் அவர் “இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்..” என குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். பார்த்திபனும் அவரது ட்விட்டை பகிர்ந்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022
