சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவை கொந்தளிக்க வைத்த தனியார் மருத்துவமனையின் பதில்.. என்ன தெரியுமா?

சென்னை: சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவை கொந்தளிக்க வைத்த தனியார் மருத்துவமனையின் பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.இந்திய அரசின் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு வருகிறார். விரைவில் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

டாக்டர் திவ்யா “மகிழ்மதி” என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வரும் சேவையையும் செய்து வருகிறார்.. இதற்காக தொண்டு நிறுவனங்களோடு கைகோர்த்துள்ள டாக்டர் திவ்யா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்யும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

இவர் ஏழைகள் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகளை பெற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உடையவர். அடிக்கடி தனியார் மருத்துவமனைகளுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிடுவார். அந்த வகையில் சிடி ஸ்கேன் விவாரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.

திவ்யா கூறுகையில் “ஒரு வருசத்தில் மருத்துவ செலவுகள் 63 மில்லியன் இந்திய மக்களை வறுமையில் தள்ளுகிறது. எம்ஆர்ஐ, சிடி, அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டறியும் இமேஜிங் சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த விலைகள் சாமானியர்களால் தாங்க முடிவதில்லை.

நான் “மகிழ்மதி” இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குகிறோம். அத்துடன், நாங்கள் நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளையும் வழங்கி கொண்டிருக்கிறோம்.

எம்ஆர்ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்க ஒரு தனியார் மருத்துவமனையிடம் கோரியபோது, ” எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன. ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும், இயந்திரங்களைப் பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை” என்ற விளக்கத்தை அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

தனியார் மருத்துவமனைகள் எம்.ஆர்.ஐ. மற்றும் பிற இமேஜிங் சேவைகளின் விலையில் 30 சதவீதம் குறைக்கக் கோரி எனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது” இவ்வாறு டாக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews