ஜனவரி 12ஆம் தேதிக்கான பிரதமரின் தமிழக வருகை ரத்து! காணொலி மூலமாக மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைப்பு!!

ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பாஜகவின் சார்பில் மதுரையில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் கொரோனாவின் காரணமாக பொங்கல் விழா ரத்து ஆனது.

அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதியில் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் சற்று மாற்றம் நிகழ்கிறது. ஏனென்றால் ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகையை ரத்தானது.

இதனால் காணொலி மூலமாக மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காணொலியில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் காணொலியில் கல்லூரியை திறந்து வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவி த்துள்ளது. ரூபாய் 4000 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ரூபாய் 2145 கோடி வழங்கியுள்ளது என்று அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. காணொலி மூலம் கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஜனவரி 12 ஆம் தேதியில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment