விபத்தில் சிக்கிய பிரதமரின் குடும்பம்!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி தனது காரில் பயணம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் , மைசூர் நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் கட்கோலோ என்கிற கிராமம் அமைந்துள்ளது.

அதன் வழியாக இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் காரில் பயணம் செய்துள்ளார்.

அவரது டிரைவர் சத்தியநாராயணன் காரை இயக்க பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி மற்றும் அவரது மகன் மேகுல் மோடிமருமகள் ஜினாள், பேரன் மஹரத் உள்ளிட்டோர் காருக்குள் இருந்து உள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமான டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் பதறிப்போன இந்த குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டி கத்தி உள்ளனர்.

அனைவரையும் மீட்டு மைசூர் ஜோஎஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

தமிழ்நாடு மக்களுக்கு தனி ID… புதிய முயற்சி !

அதையடுத்து காயம் அடைந்த பிரகலாத் மோடி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.