இந்த நேரத்தில் அமெரிக்க அதிபரோடு பிரதமர் பேச்சு வார்த்தை…! என்னவாக இருக்கலாம்?

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக உடன் காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இரு நாட்டு அதிபர்கள் உடனும் பாரத பிரதமர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் இரண்டு நாட்டு அதிபர்களும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு சில எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இந்தியாவோ ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணை தர உள்ளதால் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

இதனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடான கருத்துக்கள் உருவானது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இரு தரப்பு உறவு, ரஷ்யா-உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பற்றிய ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment