ஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! உக்ரைன் விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை!!

உக்ரேனில் தற்போது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. ரஷ்யாதொடர்ந்து ஏழு நாட்கள் போர் புரிந்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்குள்ள இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக நம் அரசு மீட்டுக் கொண்டு வருகிறது.

இதுவரை 7 விமானங்கள் உக்ரேன் நாட்டிற்கு சென்று அங்குள்ள இந்தியர்களை மீட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது இந்திய குடியரசுத் தலைவருடன் திடீரென்று சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

அதன்படி உக்ரைன் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். உக்ரேன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு உக்ரேனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் மீட்கும் பணி குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்து வருகிறார்.

உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான முறையில் மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்குவது பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment