சென்னை கோயம்பேட்டில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிர வைக்கும் அளவிற்கு உயர்ந்து விற்கப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் காய்கறிகள் வாங்க கூட தயங்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 130 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது,
சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை விலை விற்பனையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், கேரட் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீட்ரூட் கிலோ 70 ரூபாய்க்கும், முள்ளங்கி கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைகோஸ் கிலோ 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் கிலோ 110 ரூபாய், கத்திரிக்காய் கிலோ 92 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 82 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.
முருங்கைக்காய் கிலோ 160 ரூபாய்க்கும், காலிபிளவர் கிலோ 88 ரூபாய்க்கும், அவரக்காய் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொத்தவரங்காய் கிலோ 80 ரூபாய்க்கும், நூக்கல் கிலோ 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விலை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தையே மக்கள் தேடி வரும் என்று கூறியுள்ளனர். காய்கறி வைத்து சமைத்து சாப்பிடக் கூட முடியவில்லை என்று மக்கள் மிகுந்த வருத்தத்தோடு கூறியுள்ளனர்.
விற்கும் விலையில் காய்கறிகளை வாங்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் பால் சாதம், தயிர்சாதம் என சமைத்து சமாளிக்கிறோம் என்று இல்லத்தரசிகள் கூறியுள்ளனர். விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.