தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்தானது குறைந்துள்ளது. அதன் படி, 90-க்கும் மேற்பட்ட லாரிகளில் வாகனங்கள் வருவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது 40 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய தினத்தில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.40-ஆன விற்பனையாகிறது.
மேலும், வரும் காலங்களில் மழை தொடர்ந்து நீடித்து வந்தால், காய்கறிகளில் விலையானது தொடர்ந்து அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.