இன்று முதல்! பாலின் விலை ரூ.4 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரில் பாண்லே நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் அனைத்து பாலும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு நிறுவனமாக பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தாக தெரிகிறது.

ஷாக் நியூஸ்! H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி..!!

இதன் காரணமாக பால் கொள்முதல் மற்றும் விலை நிர்ணயம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைப்பெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலையை 34 ரூபாயில் இருந்து 37 ரூபாய் ஆக உயர்த்தி இருந்தனர்.

தற்போது பால் கொள்முதல் விலையானது லிட்டருக்கு ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலில் வருவதாகா அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்!

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இத்தகை அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.